புதன், 10 பிப்ரவரி, 2016

மகாமகப் பெருவிழாவிற்கு பிப்-13ந் தேதி முதல் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடு

மகாமகப் பெருவிழா பிப்-13 ந் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று முதல் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
 விவரங்கள் பின்வருமாறு

பிப்ரவரி 13

திருச்சியில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் ரயில் காலை 8.10 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடையும்.

மயிலாடுதுறையில் இருந்து காலை 9.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு தஞ்சாவூருக்கு பகல் 11 மணிக்கு சென்றடையும்.

தஞ்சாவூரில் இருந்து பகல் 12.35 மணிக்கு புறப்படும் ரயில் மயிலாடுதுறைக்கு மதியம் 2.45 மணிக்கு சென்றடையும்.

மயிலாடுதுறையில் இருந்து மாலை 4.25 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு தஞ்சாவூருக்கு மாலை 6.45 மணிக்கு சென்றடையும்.

மேற்கண்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் “டெமு” ரயில்கள் ஆகும். இவற்றில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

பிப்ரவரி 14,15,15

வருகிற 14,15,16 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் - மயிலாடுதுறை இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. விபரம் பின்வருமாறு

தஞ்சாவூரில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் தஞ்சாவூருக்கு மயிலாடுதுறைக்கு பகல் 11.25 மணிக்கு சென்றடையும்

மயிலாடுதுறையிலிருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் தஞ்சாவூருக்கு பகல் 11.50 மணிக்கு சென்றடையும்

தஞ்சாவூரில் இருந்து மதியம் 2.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு சென்றடையும்

மயிலாடுதுறையில் இருந்து மாலை 3..35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் தஞ்சாவூருக்கு மாலை 5.25 மணிக்கு சென்றடையும்.

மேற்கண்ட ரயில்கள் தஞ்சாவூர்-மயிலாடுதுறை இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.


விரிவான செய்திக்குறிப்புக்கு - தினத்தந்தி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக