ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

மகாமக குளத்தில் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை நீர்ப்பகுப்பாய்வு

கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, 15 நிமிடங்களுக்கு ஒரு முறை குளத்தின் நீரை பகுப்பாய்வு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குளத்தில் உள்ள 20 தீர்த்தங்களுக்கும் 20 சுகாதார ஆய்வாளர்கள் நான்கு கரைகளுக்கும் 4 சுகாதார் ஆய்வாளர்கள் , தயார் நிலையில் 5 பேர் என மொத்தம் 29 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவர்.

சுத்தத்தின் அளவு குறைவாக இருப்பின் , உடனடியாக குளத்தில் குளோரின் பவுடர் போடப்படும் என்றார்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார ஆய்வாளர்கள் ஆர். சரவணன் மற்றும் டி.ராஜேந்திரன்.

மேலும், தேவைப்பட்டால் ஹைப்போகுளோரைடு திரவம் மூலமும் தண்ணீரில் குளோரின் அளவு சரிபார்க்கப்படுகிறது.

விரிவான செய்திகளுக்கு - தினமணி 14.2.2016 (திருச்சி பதிப்பு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக