வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

மகாமகப் பெருவிழாவிற்கு தமிழில் வழிகாட்டும் 'மகாமகம்' செயலி! விகடன் சிறப்புக் கட்டுரை

விகடன்  இணைய தள சிறப்புக் கட்டுரை

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த பெருவிழா வரும் பிப்ரவரி 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு தமிழில் வழிகாட்டுவதற்கென செயலி ஒன்றைத் தயார் செய்துள்ளனர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள். இச்செயலி மகாமகப் பெருவிழாவுக்கான தமிழக அரசின் அதிகாரபூர்வ செயலி ஆகும்.
 

பண்டைய காலம் முதல் இன்று வரை இந்துக்களின் புனித நீராடல் என்பதானது நதிக்கரைகளில் மட்டுமே காணப்படும் நிகழ்வாகும். கும்பகோணத்தில் மட்டுமே உள்ள புனித நீராடல் வழக்கம் மகாமகக் குளத்தில் நீராடுவதைக் குறிக்கும். மகாமக திருக்குளம் எவ்வாறு உருவானது, ஸ்தல வரலாறு, தொடர்புடைய கோயில்கள், மாசிமகம் நீராடல், திருக்குள அமைப்பு, மகாமகம் 2016 பற்றிய குறிப்புகள் செயலியில் இடம்பெற்றுள்ளது. மேலும் படிக்க ...

வழிகாட்டும் மகாமகம் செயலி - Official Android App குறித்து தி இந்து தமிழ் நாளிதழில் சிறப்புக் கட்டுரை

மகாமகப் பெருவிழாவிற்கான அதிகாரபூர்வ ஆன்ட்ராய்டு செயலி குறித்து தி இந்து தமிழ் நாளிதழின் சிறப்புக் கட்டுரை.


மகாமகப் பெருவிழா அழைப்பிதழ், நிகழ்ச்சி நிரல் - அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்

மகாமகப் பெருவிழா நாளை பிப்ரவரி 12, 2016 முதல் பிப்ரவரி 23, 2016 வரை நடைபெற இருக்கிறது.  அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர்  திருக்கோயில் அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி நிரல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 
















மகாமகம் சிறப்பு ஆன்ட்ராய்டு செயலியைப் பதிவிறக்க 
சொடுக்கவும்

மகாமகப் பெருவிழா சிறப்பு மலர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

மகாமக விழாவை முன்னிட்டு தஞ்சை சரசுவதி மகால் நூலகம் சார்பில் தயாரிக்கப்பட்ட சிறப்பு மலரை கலெக்டர் திரு. சுப்பையன் வெளிட்டார். 

விழாவை முன்னிட்டு 4 இடங்களில் கண்காட்சியும், 10 நாட்கள் 5 இடங்களில் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. 

மேலும் 307 இடங்களில் குடிநீர் வசதியும், 350 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு தினத்தந்தி நாளிதழ்.(11-02-2016). 

நாளை மகாமகப் பெருவிழா கொடியேற்றம்; பக்தர்கள் புனித நீராட அனுமதி.

கும்பகோணத்தில் மகாமகப் பெருவிழா பிப்.13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

கொடியேற்றத்தை தொடர்ந்து பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவர் அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் தெரிவித்தார்.


கூடுதல் விவரங்களுக்கு     தினமணி (12-02-2016).

மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் நாளை முதல் கலை நிகழ்ச்சிகள்.

மகாமகத் திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் சனிக்கிழமை(பிப்-13) முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.


தமிழ்நாடு அரசுக்கலை, பண்பாட்டுத்துறை, தென்னகப் பண்பாட்டு மையம், மாவட்ட நிர்வாகம் ஆகியவை சார்பில் சனிக்கிழமை முதல் பிப்.22-ம் தேதி வரை தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.


கூடுதல் விவரங்களுக்கு     தினமணி (12-02-2016).

கும்பகோணம் மகாமக குளத்தில் அதிக ஒளி தரும் மின் விளக்குகள் 4 உயர் மின் கோபுரங்களில் அமைப்பு.

கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் இரவு நேரத்திலும் புனித நீராடும் வகையில் 240 மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் குளத்தின் கிழக்கு படித்துறையில் இறங்கி குளித்துவிட்டு மேற்கு படித்துறை வழியாக மேலே ஏறிச் செல்ல வேண்டும். 

தென் பகுதியில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், வடபகுதியில் முக்கியப்பிரமுகர்கள், மையப்பகுதியில் பொதுமக்கள் நீராடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் பக்தர்கள் மீது தண்ணீர் தெளிப்பதற்காக 7 இடங்களில் ஸ்பிரிங்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன.  

இரவு நேரத்தில் பக்தர்கள் புனித நீராட வசதியாக குளத்தின் நான்கு கரைகளிலும் உள்ள  4 உயர் மின் கோபுரங்களில் அமைப்பு அதிக ஒளி தரும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.



கூடுதல் விவரங்களுக்கு      தி இந்து (12-02-2016)